Images
  • cbd

'வெளிநாட்டவர்களுக்கெதிரான வாதத்தைத் தவிர்க்கவேண்டும்'

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (Progress Singapore Party - PSP) நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டவர்களுக்கு எதிரான
வாதங்களைத் தவிர்க்குமாறு நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) கேட்டுக்கொண்டார்.

வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்துகள், சிங்கப்பூரர்களுக்கும் - அவர்களுக்கும் இடையிலான பாகுபாட்டைக் அதிகரிக்கச் செய்யும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

வெளிநாட்டுத் திறனாளர்கள் குறித்த சட்டம் - வேலை, வாழ்க்கை தொடர்பில் சிங்கப்பூரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி கூறியிருந்தது.

வெளிநாட்டுத் திறனாளர் கொள்கை தொடர்பில் PSP முன்வைத்த தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று கூறிய திரு. வோங், அதே பிரச்சினை தொடர்பான தனி தீர்மானமாக அது பிரிக்கப்பட்டது என்றார்.

வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்துகள், சிங்கப்பூரின் பல இனத்தவருக்கு இடையிலும் வேற்றுமையை ஏற்படுத்தலாம் என்று திரு. வோங் கூறினார்.

PSPஇன் CECA வுக்கு எதிரான இயக்கத்தில், வெளிநாட்டவர்களுக்கு எதிரான கடுமையான இனவாதக் கருத்துகளும், அவர்களுக்கு எதிரான கருத்துகளும் கவனத்தில் கொள்ளாமல் விடப்படவில்லை என்று திரு. வோங் தெளிவுபடுத்தினர்.  

Top