Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சூதாட்டப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும்

உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் இன்று தொடங்கவிருக்கும் வேளையில், சிங்கப்பூரில் இணையச் சூதாட்டம், சூதாட்டப் பிரச்சினை போன்றவற்றைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் இன்று தொடங்கவிருக்கும் வேளையில், சிங்கப்பூரில் இணையச் சூதாட்டம், சூதாட்டப் பிரச்சினை போன்றவற்றைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

கடந்த வாரம் மட்டுமே, சட்டவிரோத இணையச் சூதாட்டச் சேவைகளை வழங்கிய சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்களைக் காவல்துறை கைதுசெய்தது.

தங்கள் வங்கிக் கணக்கையும், கைபேசி எண்களையும் சட்டவிரோதச் சூதாட்ட இணையத் தளங்கள் பயன்படுத்த அனுமதித்த 10 பேர் மீதும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சூதாட்டப் பிரச்சினை தொடர்பான தேசிய மன்றமும், தேசியக் குற்றத் தடுப்பு மன்றமும் பொதுமக்களிடையே விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.

சூதாட்டப் பிரச்சினைக்கான அறிகுறிகளைக் கொண்ட இளையர்களைத் தொடர்புகொள்ளவும், அவர்கள் முன்கூட்டியே உதவி நாட ஊக்குவிக்கவும் மின்னிலிக்க இயக்கம் ஒன்று தொடங்கப்படும்.

அந்த விவகாரம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, உலகக் கிண்ணப் போட்டிகளை ஒளிபரப்பும் ஒளிவழிகளிலும் அது பற்றிய அம்சங்கள் இடம்பெறும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்