Images
  • anwarz
    ( படம்: AFP )

சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் உள்ள உறவு மேலும் மேம்படும்: அன்வார் இப்ராஹிம்

சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் உள்ள உறவு மேலும் மேம்படும் என்று திரு. அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.

திரு. மகாதீர் முகம்மது கடந்த மே மாதம் மலேசியப் பிரதமராக பதிவேற்றப் பிறகு சிங்கப்பூருடன் சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன.

பின்னர் அவற்றுக்கான தீர்வுகளும் காணப்பட்டன.

சில திட்டங்களுக்கு எதிராகத் திரு. மகாதீர் எழுப்பிய கேள்விகள் சரியென்றும் திரு. அன்வார் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் நஜீப் சிங்கப்பூருடன் நல்ல உறவை மேம்படுத்தினாலும் அவரின் சில திட்டங்கள் சந்தேகத்திற்குரியது என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரும் மலேசியாவும் ஒன்றுக்கொன்று தேவையென்றும், இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மேம்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இடைத்தேர்தலில் வெற்றிபெற்றால், மலேசியப் பிரதமராக பதவியேற்பாரா என்ற கேள்விக்கு திரு. அன்வார் பதில்கூறவில்லை.

Top