Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஐடஹோவில் சிங்கப்பூர் ஆயுதப்படையின் முதல் பயிற்சி

சிங்கப்பூர் ஆயுதப்படை அமெரிக்காவின் ஐடஹோ (Idaho) மாநிலத்தில் முதல்முறையாகப் பயிற்சிகளை மேற்கொள்கிறது.

வாசிப்புநேரம் -
ஐடஹோவில் சிங்கப்பூர் ஆயுதப்படையின் முதல் பயிற்சி

(படம்: Aqil Haziq Mahmud/ CNA)

சிங்கப்பூர் ஆயுதப்படை அமெரிக்காவின் ஐடஹோ (Idaho) மாநிலத்தில் முதல்முறையாகப் பயிற்சிகளை மேற்கொள்கிறது.

பெரிய அளவிலான பயிற்சி இடம் சிங்கப்பூர் ஆயுதப்படையின் திட்டமிடலுக்கும் அதன் பணிகளைச் செயல்படுத்துவதற்கும் கூடுதல் நீக்குப்போக்கை வழங்கும்.

கூடுதல் செயல்திறன், மேம்பட்ட துல்லியம் ஆகியவற்றைக் கொண்டு வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திப் பயனடைவதற்கும் அது வழிவகுக்கும்.

எதிரிகளைத் தேடிப்பிடிப்பதில் ஆயுதப்படையினருக்குக் கைகொடுக்கவிருக்கிறது Heron 1 விமானம்.

அதனைச் செயல்படுத்த உதவுகிறது ATD எனப்படும் இலக்குகளைக் கண்டறியும் தானியக்க மென்பொருள்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் மென்பொருளின் உதவியோடு எதிரிகளின் இலக்குகளைக் கண்டறிவது புதிய வசதிகளில் அடங்கும்.

Exercise Forging Sabre எனப்படும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆயுதப்படையினர் எதிரிகளை உடனுக்குடன் அடையாளங்காண செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உதவுகிறது.

போர்க்களத்தில் ஆயுதப்படையினர் விரைவாக, மேலும் துல்லியமான முடிவுகளை எடுக்க அது வகைசெய்கிறது.

Target Look-Ahead என்பது மற்றொரு செயற்கை நுண்ணறிவு வசதி.

போர் விமானங்கள் எதிரிகள் வந்துசேரும் நேரத்தைத் துல்லியமாகக் கணிக்க அது உதவும்.
    

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்