Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அப்போலோ செல்லப்பாஸ் கடையில் ஊழல் புரிந்த இருவருக்கு $5,000 அபராதம்

அப்போலோ செல்லப்பாஸ் கடையில் வேலை செய்த விற்பனை அதிகாரிக்கும், மொத்த விற்பனை நிறுவனம் ஒன்றின் இயக்குனருக்கும் ஊழல் புரிந்ததற்காக ஆளுக்கு 5,000 வெள்ளி அபராதம் இன்று விதிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
அப்போலோ செல்லப்பாஸ் கடையில் ஊழல் புரிந்த இருவருக்கு $5,000 அபராதம்

படம்: Google Street view

அப்போலோ செல்லப்பாஸ் கடையில் வேலை செய்த விற்பனை அதிகாரிக்கும், மொத்த விற்பனை நிறுவனம் ஒன்றின் இயக்குனருக்கும் ஊழல் புரிந்ததற்காக ஆளுக்கு 5,000 வெள்ளி அபராதம் இன்று விதிக்கப்பட்டது.

அந்தத் தகவலை லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது.

இந்தியாவைச் சேர்ந்த அந்த இருவரில் ஒருவர் 34 வயது முகமது மாலிக் சீனி சயத்.

அவர் Via Star நிறுவனத்தின் இயக்குனர்.

இன்னொருவர் 28 வயது அருணாசலம் அருண்ராஜ். அவர் அப்போலோ செல்லப்பாஸ் கடையில் விற்பனை அதிகாரியாகப் பணியாற்றினார்.

அந்தக் கடையில் Via Star நிறுவனத்தின் கடிகார விற்பனையை அதிகரிக்க இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அதனால் அந்த நிறுவனத்தின் கடிகாரங்கள் கூடுதலாகக் கொள்முதல் செய்யப்பட்டன.

அந்த ஏற்பாட்டில் ஒத்துழைப்பு நல்கியதற்காக, Via Star இயக்குனர் மாலிக், அருண்ராஜிடம் ரொக்கமாக 2,600 வெள்ளியைக் கொடுத்துள்ளார் என்று
லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்