Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தொலைபேசியில் மோசடி அழைப்புகள், குறுந்தகவல்கள் பெறுகிறீர்களா? பாதுகாக்கும் புதிய செயலி

தொலைபேசியில் மோசடி அழைப்புகள், குறுந்தகவல்கள், ஆகியவற்றை அவ்வப்போது பெறுவதுண்டா?

வாசிப்புநேரம் -
தொலைபேசியில் மோசடி அழைப்புகள், குறுந்தகவல்கள் பெறுகிறீர்களா? பாதுகாக்கும் புதிய செயலி

(படம்: Ili Nadhirah Mansor/ TODAY)

தொலைபேசியில் மோசடி அழைப்புகள், குறுந்தகவல்கள், ஆகியவற்றை அவ்வப்போது பெறுவதுண்டா?

அதைப்பற்றி இனிக் கவலைப்படத் தேவையில்லை!

தேசியக் குற்றத் தடுப்பு மன்றம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ScamShield செயலி அதிலிருந்து பாதுகாக்கும்.

தொலைபேசி அழைப்புகள் வழியாகவோ, குறுந்தகவல்கள் வழியாகவோ தொடர்புகொள்ளும் மோசடிக்காரர்களைத் தடுக்கும் வகையில் அந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

செயலி எவ்வாறு வேலைசெய்யும்?

  • அறிமுகம் இல்லாத எண்களிடமிருந்து வரும் குறுந்தகவல்களில் இடம்பெறும் சில சந்தேகத்திற்குரிய தகவல்கள் அடையாளம் காணப்படும். செயலியின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (Artificial Intelligence) மூலம் அது சாத்தியமாகும்.
  • அந்தக் குறுந்தகவல்கள் பின்னர் 'junk folder' எனும் தேவையில்லாத தகவல் சேகரிக்கப்படும் பிரிவுக்கு மாற்றப்படும்.
  • அதனையொட்டி தேசியக் குற்றத் தடுப்பு மன்றத்திற்கும் காவல்துறைக்கும் தகவல் அனுப்பப்படும்.
  • தொலைபேசிக்கு வரும் மோசடி அழைப்புகள், குறுந்தகவல்கள் ஆகியவற்றையும் செயலி வழி புகார் செய்யலாம்.

செயலியைப் பயன்படுத்துவதற்கு தொலைபேசி எண்ணைப் பதிவுசெய்யத் தேவையில்லை. பயனீட்டாளர்களின் இருப்பிடம், தனி நபர் தகவல் ஆகியவை கேட்கப்படமாட்டாது.

அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள அந்தச் செயலியை, Apple கைத்தொலைபேசிகளில் மட்டுமே பதிவிறக்கம் செய்யமுடியும்.

செயலியை Android கைத்தொலைபேசிகளில் அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்