Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்க Apple நிறுவனத்துடன் கைகோக்கும் சுகாதார மேம்பாட்டு வாரியம்

சுகாதார மேம்பாட்டு வாரியமும், Apple நிறுவனமும் இணைந்து  LumiHealth எனும் தேசிய அளவிலான புதிய திட்டத்தைத் தொடங்கவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்க Apple நிறுவனத்துடன் கைகோக்கும் சுகாதார மேம்பாட்டு வாரியம்

படம்: Apple.com

சுகாதார மேம்பாட்டு வாரியமும், Apple நிறுவனமும் இணைந்து LumiHealth எனும் தேசிய அளவிலான புதிய திட்டத்தைத் தொடங்கவிருக்கின்றன.

சிங்கப்பூரர்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், உடலுறுதியைக் கண்காணிக்கவும் அது உதவும்.

அத்தகைய திட்டம் உலகில் அறிமுகமாவது இதுவே முதல்முறை.

பயனீட்டாளர்கள் Apple Watchஉம், LumiHealth iPhone செயலியும் வைத்திருக்கவேண்டும்.

அவர்களின் வயது, பாலினம், உடல் எடை ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்பட்ட உடலுறுதி நடவடிக்கைகளில் ஈடுபடலாம். நடைப் பயிற்சி, நீச்சல் உள்ளிட்டவையும் அவற்றில் அடங்கும்.

இலக்குகளை உருவாக்கி அவற்றை எட்டுதல், சவால்களை நிறைவேற்றுதல் ஆகியவற்றின் மூலம் 380 வெள்ளி வரையிலான அன்பளிப்புகளைப் பெறவும் வாய்ப்புண்டு.

தடுப்பூசி, சுகாதாரப் பரிசோதனைக்குச் செல்லுதல் ஆகியவை குறித்த நினைவூட்டல்கள் அவர்களுக்கு அனுப்பப்படும்.

ஈராண்டுத் திட்டம் அடுத்த மாதப் பிற்பகுதியில் தொடங்கவிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்