Images
  • sabre

சிங்கப்பூரின் அரசுரிமையைப் பாதுகாக்கும் ஆற்றல் கொண்ட திறன்மிக்க ராணுவப் படையை உருவாக்குவதே இலக்கு

சிங்கப்பூரின் அரசுரிமையைப் பாதுகாக்கும் ஆற்றல் கொண்ட திறன்மிக்க படையை உருவாக்குவது ராணுவப் பயிற்சியின் ஆக முக்கிய இலக்கு என்று தற்காப்புக்கான மூத்த துணையமைச்சர் ஹெங் சீ ஹாவ், கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் நடைபெறும் Forging Sabre எனும் ஒருங்கிணைந்த சிங்கப்பூர் ஆயுதப்படைப் பயிற்சிக்கு இடையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

வெறும் பேச்சோடு நின்றுவிடாமல் ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்குத் தத்ரூபமான, வலுவான பயிற்சி தேவை என்றார் திரு. ஹெங்.

ஆயுதப்படை வாங்கும் சாதனங்களைப் பயன்படுத்தி, திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான சூழலில் பயிற்சி நடைபெறவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

Forging Sabre பயிற்சியில் பங்குபெறும் சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகளையும் திரு. ஹெங் சந்தித்தார்.

வீரர்களும் சாதனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு சிக்கலான போர்ப் பயிற்சிகள் எவ்வாறு திறன்மிக்க வகையில் கையாளப்படுகின்றன என்பது குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

பயிற்சிகளின்போது, உள்ளூரிலும் வெளியூரிலும் பாதுகாப்புக்குத் தொடர்ந்து முக்கிய முன்னுரிமை அளிக்கப்படுவதாத் திரு. ஹெங் தெரிவித்தார்.
 

Top