Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போலிப் பொருள்களை இணையத்தில் விற்றதாக நம்பப்படும் மூவர் கைது

போலிப் பொருள்களை இணையத்தில் விற்றதாகச் சந்தேகிக்கப்படும் மூவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. 

வாசிப்புநேரம் -

போலிப் பொருள்களை இணையத்தில் விற்றதாகச் சந்தேகிக்கப்படும் மூவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

நேற்று லொரோங் ஒங் லாய், சுவா சூ காங் அவன்யூ 4, எங்கர்வேல் ரோடு ஆகிய இடங்களில் (Lorong Ong Lye, Choa Chu Kang Avenue 4, Anchorvale Road) குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.

சோதனை நடவடிக்கையில் போலி முத்திரைகளைக் கொண்ட 3,200 பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் 40,000 வெள்ளி.

காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

போலிப் பொருள்களை உற்பத்திசெய்து விநியோகிப்பது சட்டப்படி கடுமையான குற்றம்.

அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 100,000 வெள்ளி வரை அபராதமோ, 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ, இரண்டுமோ விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்