Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரை உன்னத நிலைக்குக் கொண்டு செல்ல ஒரே சமூகமாகச் செயலாற்றவேண்டும்: துணைப் பிரதமர் ஹெங்

சிங்கப்பூரை உன்னத நிலைக்குக் கொண்டு செல்ல ஒரே சமூகமாகச் செயலாற்றவேண்டும்; எத்தகைய பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருடைய தனித்திறனைக் கண்டறிய வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரை உன்னத நிலைக்குக் கொண்டு செல்ல ஒரே சமூகமாகச் செயலாற்றவேண்டும்: துணைப் பிரதமர் ஹெங்

(கோப்புப் படம்: Mediacorp)

சிங்கப்பூரை உன்னத நிலைக்குக் கொண்டு செல்ல ஒரே சமூகமாகச் செயலாற்றவேண்டும்; எத்தகைய பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருடைய தனித்திறனைக் கண்டறிய வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறியுள்ளார்.

உடற்குறையுள்ளோரின் திறனைப் போற்றும் கலைப் படைப்பு விழாவில் பேசிய அவர், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் உடற்குறையுள்ளோர் உட்பட அனைவருக்கும் முக்கியப் பங்கு உண்டு என்றார்.

வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் சிறப்புத் தேவையுடைய 25 பேரின் 40க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Our Tampines Hubஇல் நாளை வரை நடைபெறும் இந்த நிகழ்வு, வடகிழக்குப் பகுதியின் இயற்கை அழகைக் காட்சிப்படுத்தியுள்ளது.

இங்குள்ள கலைப் படைப்புகள் பிடித்திருந்தால் கையோடு வாங்கிச் செல்லலாம்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு. ஹெங்,கலைப் படைப்புகளைப் பார்வையிட்டதோடு, கலைஞர்களையும் சந்தித்துப் பேசினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்