தமிழ்ச்சுடர் 2019: கலை மூலம் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அமைப்புகளுக்கு விருதுகள்
தமிழ்ச்சுடர் 2019-இல் AK Theatre நாடகக் குழுவுக்கும், Athipathi International Theatre குழுவுக்கும் கலைக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் கலைத்துறை மூலம் தமிழ்மொழியை வளர்க்கும் முயற்சிகளுக்காக இரு குழுக்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் ஈராண்டுக்கு ஒரு முறை ‘தமிழ்ச்சுடர்’ விருதுகள் வழங்கப்படுகின்றன.
இணை ஏற்பாட்டாளராகத் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும், ஆதரவாளர்களாகப் பல்வேறு அமைப்புகளும் முயற்சியில் கைகோத்துள்ளன.
கலைப் பிரிவுக்கு வந்திருந்த பல விண்ணப்பங்களிலிருந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விருது வழங்கும் நிகழ்ச்சி ஷங்ரிலா ஹோட்டலில் (8 நவம்பர்) இன்று நடைபெறுகிறது.
சமூகத் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என 250க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.
செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான திரு. விக்ரம் நாயர் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். வெற்றியாளர்களுக்கு அவர் விருதுகளை வழங்கிச்சிறப்பித்தார்.