Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மிருதங்கம் புல்லாங்குழல் வாசிப்பதில் ஆர்வங்காட்டும் இளம் பெண்கள்

இசைக்கருவிகள் பல இருக்க, பாரம்பரிய இந்திய இசைக்கருவிகளை வாசிக்க ஆர்வம் கொண்டுள்ளனர் சில இளையர்கள்.

வாசிப்புநேரம் -

இசைக்கருவிகள் பல இருக்க, பாரம்பரிய இந்திய இசைக்கருவிகளை வாசிக்க ஆர்வம் கொண்டுள்ளனர் சில இளையர்கள்.

அதிலும் பொதுவாக ஆண்களால் இசைக்கப்படும் தோல் வாத்தியக் கருவிகள், புல்லாங்குழல் ஆகியவற்றில் இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

எஸ்ப்ளனேட் அரங்கில் நடைபெற்று வரும் 'கலா உத்சவம்' விழாவில் Temple of Fine Arts கலைப்பள்ளி நேற்று இசை விருந்து படைத்தது.

மிருதங்கம், தப்லா, புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளுடன் பல்வேறு கர்நாடக இசைப் படைப்புகள் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

அவற்றை நிபுணத்துவத்துடன் வாசித்த சில இளையர்களுடன் 'செய்தி' பேசியது.

ஆர்வமே திறனுக்கு அடிப்படை என்கின்றனர் இவர்கள். 

(காணொளி: பிரியங்கா)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்