Images
  • PM lee
    பிரதமர் லீ சியென் லூங். படம்: Channel NewsAsia 

வட்டாரத்தில் ஆசியான் முக்கிய சக்தியாக நீடிக்க வேண்டும் - பிரதமர் லீ

இவ்வட்டாரத்தில் ஆசியான் முக்கிய சக்தியாக நீடிக்க கடுமையாகப் பாடுபட வேண்டும் எனப் பிரதமர் லீ சியென் லூங் இன்று (மார்ச் 13) கூறினார்.

ISEAS - யூசோஃப் இஷாக் கல்விக் கழகத்தின் 50ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் லீ உரையாற்றினார். 1960களில் ஆசியானும் ISEAS கல்விக் கழகமும் நிறுவப்பட்ட போது 21ஆம் நூற்றாண்டை விட உலகம் மிகவும் வேறுபட்டிருந்தது. கெடுபிடிப் போர் முடிந்து வெகுநாளாகி விட்டது. தென்கிழக்காசியா இப்போது பெரும்பாலும் அமைதியாகவும் நிலைத்தன்மையோடும் இருப்பதாய்  அவர் குறிப்பிட்டார்.

ஆனால் எப்போதும் ஒருசில சச்சரவுகளும் சிக்கலான விவகாரங்களும் இருக்கவே செய்யும் என அவர் தெரிவித்தார்.

சீனா, இந்தியா ஆகிய புதிய சக்திகளின் வளர்ச்சியால் ஆசியான் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் எனப் பிரதமர் லீ வலியுறுத்தினார்.


உங்கள் கருத்து

Top