Images
  • suntec
    (படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

ஆசியான் மாநாட்டில், பொருளியல் ஒருங்கிணைப்புக்கு முக்கியத்துவம் ?

சிங்கப்பூரில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் 33ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், வட்டாரப் பொருளியல் ஒருங்கிணைப்பு முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2030ஆம் ஆண்டில், உலகின் நான்காவது பெரிய பொருளியலாக ஆசியான் உருவெடுக்கும் என்று கருதப்படுகிறது.

சீனாவுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றம் உள்ளிட்ட சில அம்சங்கள் அதற்கு இடையூறு விளைவிக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இம்மாதம் 13,14,15 தேதிகளில் அந்த உச்சநிலை மாநாடு நடைபெறவிருக்கிறது.

Top