Images
  • ASEAN Summit (1)
    (படம்: AFP/Romeo Gacad)

33ஆவது ஆசியான் உச்சநிலைச் சந்திப்பு: சிங்கப்பூரில் நாளை தொடங்குகிறது

33ஆவது ஆசியான் உச்சநிலைச் சந்திப்பு நாளையிலிருந்து (நவம்பர் 11) 15ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இடம்பெறும்.

ஆசியானுக்குத் தலைமையேற்றுள்ள சிங்கப்பூரின் இறுதிப்பணி இது.

ஆசியானின் அறிவார்ந்த நகரங்களுக்கான திட்டங்களை அதன் தலைவர்கள் செயல்படுத்த உறுதியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து மாறி வரும் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றைப் பற்றியும் ஆசியான் தலைவர்கள் கலந்துரையாடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 15ஆம் தேதி பிரதமர் லீ சியென் லூங் ஆசியான் தலைமைத்துவத்தை தாய்லந்துப் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சாவிடம் ஒப்படைப்பார்.  

Top