Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆசியா முன்னேற்றம் காண மற்ற வட்டாரங்களுடன் கூட்டாகச் செயல்பட வேண்டும்: பிரதமர் லீ

ஆசியா, உலகின் மையம் அல்ல என்றும், அது முன்னேற்றம் காண மற்ற வட்டாரங்களுடன் கூட்டாகப் பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் லீ சியென் லூங் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
ஆசியா முன்னேற்றம் காண மற்ற வட்டாரங்களுடன் கூட்டாகச் செயல்பட வேண்டும்: பிரதமர் லீ

படம்: CNA

ஆசியா, உலகின் மையம் அல்ல என்றும், அது முன்னேற்றம் காண மற்ற வட்டாரங்களுடன் கூட்டாகப் பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் லீ சியென் லூங் கூறியிருக்கிறார்.

மெக்சிக்கோவுக்கு மேற்கொண்டுள்ள 4 நாள் அதிகாரத்துவப் பயணத்தின்போது, அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

சுமார் 250 சிங்கப்பூர், மெக்சிக்கோ வர்த்தகத் துறையினரிடம் ஆற்றிய உரையில் அவர் அதனைத் தெரிவித்தார்.

ஆசியா, தனித்துச் செயல்பட்டால், அது செயலிழந்து போகாது. ஆனால், பல வாய்ப்புகளை இழந்துவிடும் என்றார் பிரதமர் லீ.

ஆசியாவும், உலகமும் வறுமை நிலையைக் காணலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 50 ஆண்டுகளில் சிங்கப்பூர் வெற்றிகரமான நடுவமாக உருமாறி, உலகின் பெருளியல், அரசியல் ஆதிக்கத்தின் மையத்தைத் திசை திருப்பியதற்குப் பாராட்டு பெற்றிருப்பது குறித்த கருத்துகளுக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்