Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Asiatravel.com உரிமத்தை ரத்து செய்ய என்ன காரணம் ?

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், இணையத்தில் சேவை வழங்கிவந்த பயண முகவர் நிறுவனமான Asiatravel.comஇன் உரிமத்தை ரத்து செய்ததற்கு, கணக்குத் தணிக்கையாளர்களின் அறிக்கை காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
Asiatravel.com உரிமத்தை ரத்து செய்ய என்ன காரணம் ?

படம்: Asiatravel.com

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், இணையத்தில் சேவை வழங்கிவந்த பயண முகவர் நிறுவனமான Asiatravel.comஇன் உரிமத்தை ரத்து செய்ததற்கு, கணக்குத் தணிக்கையாளர்களின் அறிக்கை காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் கணக்குத் தணிக்கையாளர்கள், அது தொடர்ந்து செயல்படமுடியாது என்று கவலை தெரிவித்திருந்தனர்.

Asiatravel.com நிறுவனம் நட்டமடைந்ததையும், அதற்குக் கடன்சுமை இருப்பதையும் அவர்கள் சுட்டினர்.

சென்ற நிதியாண்டில் நிறுவனத்துக்கு 34 புள்ளி 6 மில்லியன் வெள்ளி நட்டம் ஏற்பட்டதாக Ernest and Young கணக்குத் தணிக்கை அலுவலகம் கூறியது. அத்துடன், 11 மில்லியன் வெள்ளி கடன்தொகை இருப்பதாகவும் கூறப்பட்டது.

சென்ற மாத இறுதியில், Asiatravel.com நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்கள் 7 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான கட்டணத்தைச் செலுத்தத் தவறியதாகவும் குறிப்பிடப்பட்டது.

Asiatravel-dot-com நிறுவனம், அதன் துணை நிறுவனங்களான AT Reservation Network, AT Express and SH Tours ஆகியவற்றின் உரிமங்களை, சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தற்காலிகமாக ரத்துசெய்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்