Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மருத்துவ உதவிகளைத் தமிழ் மொழியில் பெற புதிய இணையப்பக்கம்

மருத்துவ உதவிகளைத் தமிழ் மொழியில் பெற புதிய இணையப்பக்கம் 

வாசிப்புநேரம் -

மருத்துவ உதவிகளையும் ஆலோசனைகளையும் தமிழ் மொழியில் பெற ஒரு புதிய இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் பெயர் askdr.co

அந்த இணையப்பக்கத்தில் "Spaces" என்ற பொத்தான் இருக்கும். அதைத் தட்டினால் தமிழ் மொழியில் கேள்விகளையும் பதில்களையும் காணலாம்.

அல்லது நேரடியாக இந்த இணையமுகவரிக்குச் செல்லலாம் https://www.askdr.co/spaces/covid-tamil

மருத்துவர்களையும் பொதுமக்களையும் எளிதில் இணைக்கும் விதமாக அந்த ஆங்கில இணையப்பக்கத்தை பிரையன் கோ (Brian Toh) என்ற பொறியாளர் 6 மாதங்களுக்கு முன்னர் உருவாக்கினார்.

அதன் பிறகு COVID-19 கிருமிப் பரவல் உலகைத் தலைகீழாக மாற்றியதும், மக்களுக்கு விரைவில் உதவும் விதமாக மேலும் சில மொழிகள் அதில் சேர்க்கப்பட்டன.

தமிழ் மொழி சேர்க்கப்பட்டதற்கு முக்கியக் காரணம், சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் அதிக அளவில் பயன்பெற வகை செய்வதற்கே என்றார் மருத்துவர் கண்ணன்.

நோய்கள் குறித்த விவரங்களை அறியவும் கேள்விகளை மருத்துவர்களிடம் முன்வைக்கவும் இந்த இணையப்பக்கம் உதவும்.

askdr.co பக்கத்தில் தாம் 2 மாதங்களுக்கு முன்னர் சேர்ந்ததாக மருத்துவர் கண்ணன் "செய்தி"-யிடம் கூறினார்.

தம்மோடு சேர்த்து சுமார் 85 மருத்துவர்கள் மக்களுக்கு உதவ அதில் தொண்டூழியர்களாய் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் அந்த இணையத்தில் சேவைகளை வழங்கத் தொடங்கியதாகவும் கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவ குறிப்புகள் அதிகமாக வழங்கப்பட்டு வருவதாகவும்

அவர் கூறினார்.

தற்போது கிருமித்தொற்று தொடர்பாக அதிகமான கேள்விகள் கேட்கப்படுவதாக டாக்டர் கண்ணன் தெரிவித்தார்.

தமிழ் மட்டும் அல்லாமல் மலாய், வங்காள மொழிகளும் அந்த இணையப்பக்கத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

COVID-19 கிருமித்தொற்று தொடர்பாக மட்டும் இல்லாமல் பொது மருத்துவ ஆலோசனைகளையும் அதில் பெற முடியும்

என்றார் டாக்டர் கண்ணன்.

நம்பகமான இது போன்ற இணையப்பக்கத்தால், பொதுமக்கள் தேவையற்ற அச்சத்துக்கு ஆளாவதும் பதற்றமடைவதும் குறையும் என்றார் அவர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்