Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுச் சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ள A*STAR-இன் நிர்வாகத் தலைவர்

A*STAR எனப்படும் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பின் நிர்வாகத் தலைவர் திரு லிம் சுவான் போ (Lim Chuan Poh) பொதுச் சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக வர்த்தக, தொழில் அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

A*STAR எனப்படும் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பின் நிர்வாகத் தலைவர் திரு லிம் சுவான் போ (Lim Chuan Poh) பொதுச் சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக வர்த்தக, தொழில் அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

57 வயது திரு லிம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஓய்வு பெறுவார். 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல், A*STAR நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக அவர் பணியாற்றி வருகிறார்.

பொதுச் சேவையில் கடந்த 38 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்துள்ள அவர், ராணுவத் தலைவர், தற்காப்புப் படைத் தலைவர், கல்விக்கான நிரந்தரச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

A*STAR நிறுவனத்தின் புதிய தலைவராகக் கல்விக்கான நிரந்தரச் செயலாளர் திருவாட்டி சான் லாய் ஃபுங் (Chan Lai Fung) பொறுப்பேற்கவுள்ளார்.

விரைவில் புதிய தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் வர்த்தக, தொழில் அமைச்சு குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்