Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை வீட்டில் இருந்தே அழகைப் பராமரியுங்கள்: அழகுப் பராமரிப்பு நிறுவனம்

சிங்கப்பூரில் கிருமிப்பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டம் ஜுன் 1ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் கிருமிப்பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டம் ஜுன் 1ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

அதன் பிறகு கட்டங்கட்டமாகச் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மீண்டும் சேவைக்குத் திரும்பும் என்று எதிர்பார்த்த சேவைகளில் அழகுப் பராமரிப்பு நிலையங்களும் ஒன்று.

ஆனால் பாதுகாப்பு இடைவெளிகள் தொடர்ந்து பின்பற்றப்படவேண்டும் என்பதால் அழகுப் பராமரிப்பு நிலையங்களில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

அழகு நிலையத்தில் தற்போது என்ன செய்யலாம்:

  • முடி திருத்தம்,
  • முடிக்குச் சாயம் பூசுதல்

என்ன செய்யக்கூடாது:

  • புருவங்கள் சரி செய்தல்
  • சருமப் பராமரிப்பு
  • முகங்களுக்கு "Facial" செய்வது
  • MANICURE ( நகங்களுக்கு அழகு சேர்த்தல்)
  • PEDICURE ( பாதப் பராமரிப்பு)
  • WAXING ( சருமத்திலிருந்து உரோமத்தை அகற்றுதல்)

கிருமிப்பரவல் சமூக அளவில் எப்படிக் குறைகிறது என்பதைப் பொறுத்து, மற்ற சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் பொதுமக்கள் என்ன செய்யலாம் என்று அழகுப் பராமரிப்பு நிறுவனமான Rupini's-இடம் "செய்தி" கேட்டது.

கிருமித்தொற்று காரணமாக அரசாங்கம் அறிவித்த கட்டுப்பாடுகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும், அது எல்லோருக்கும் நன்மையாக அமையும் 

பெண்களுக்குப் புருவங்கள் சரி செய்வது, சருமப் பராமரிப்பு, முகங்களுக்கு "Facial" செய்வது, MANICURE போன்றவை முக்கியம். ஆனால் தற்போதைய நிலைமையை வாடிக்கையாளர்கள் புரிந்து நடப்பதும்
முக்கியம்

என்றார் Rupini's உரிமையாளர் சிவ ராணி.

அதனால் எங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வீட்டில் இருந்தே இயற்கையாக என்னென்ன அழகுப் பராமரிப்புகளைச் செய்யலாம் என்ற குறிப்புகளை எழுதியுள்ளோம்.


என்றார் சிவ ராணி.

மற்ற அழகு நிலையங்களும் வாடிக்கையாளர்களிடம் சற்று கண்டிப்பாக இருப்பது முக்கியம் என்றார் அவர்.

சிங்கப்பூரில் பொதுமக்கள் அழகுப் பராமரிப்புப் பொருள்களை இணையம் வழி பெற்றுக்கொள்ளும் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்