Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிலிப்பீன்ஸில் கொம்பாசு சூறாவளி தாக்கியதில் குறைந்தது 19 பேர் மரணம்

பிலிப்பீன்ஸில் கொம்பாசு(Kompasu) சூறாவளி கரையைக் கடந்துள்ள நிலையில், அங்கு 19 பேர் மாண்டுவிட்டனர்.

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸில் கொம்பாசு சூறாவளி தாக்கியதில் குறைந்தது 19 பேர் மரணம்

(படம்: Gonzaga MDRRMO via AP)

பிலிப்பீன்ஸில் கொம்பாசு(Kompasu) சூறாவளி கரையைக் கடந்துள்ள நிலையில், அங்கு 19 பேர் மாண்டுவிட்டனர்.

14 பேரைக் காணவில்லை.

அங்கு திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

லூஸோன் (Luzon) தீவில் வழக்கமாக ஒரு மாதத்தில் பெய்யும் மழை இரண்டே நாளில் பெய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததில், சுமார் 15ஆயிரம் பேர் இடமின்றித் தவிக்கின்றனர்.

பிலிப்பீன்ஸில் 20 மில்லியன் டாலர் பெறுமான சேதத்தைச் சுறாவளி ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்தோரில் பெரும்பாலோர் திடீர் வெள்ளத்தில் சிக்கி மாண்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது கொம்பாசு சூறாவளி வியட்நாமை நோக்கிச் செல்கிறது.
நாளைக்குள் அது லாவோஸின் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலச்சரிவுகள் உண்டாகக்கூடும் என்று தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்பட்டால் வெளியேறத் தயாராக இருக்கும்படியும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஹாங்காங்கில் கொம்பாசு சூறாவளி தாக்கியதில், ஒருவர் மாண்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்