Images
  • handcuffed

ஆர்ச்சட்டில் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியவருக்கு 3 மாதச் சிறை; $3,000 அபராதம்

ஆர்ச்சட் ரோட்டில், இரவுநேரக் கேளிக்கை விடுதிக்கு வெளியே காவல்துறை அதிகாரிகள் இருவரைத் தாக்கியதற்காகவும் அவர்கள்மீது தகாத சொற்களைப் பயன்படுத்தியதற்காகவும் 27 வயது ஆடவருக்கு மூன்று மாதச் சிறைத்தண்டனையும் 3,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி நடந்த சம்பவத்தின் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகள் பதிவாகின.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோர்டான் லீ பிளாண்ட் அவற்றை ஒப்புக்கொண்டார். 

மதுவின் போதையில் தாம் இருந்ததாக அவர் சொன்னார். 

இரவு 2.45 மணியளவில் சேர்ரி டிஸ்கோட்டேக் இரவு கேளிக்கை விடுதியில் பத்துக்கும் மேற்பட்டோர் சண்டையில் ஈடுபட்டிருப்பதாகக் காவல்துறைக்குத் தொலைபேசிவழி தகவல் அளிக்கப்பட்டது.

அதனை விசாரிக்க அதிகாரிகள் ஏட்ரியன் டானும் இஸ்மாடி ஹுசேனும் சென்றுள்ளனர். 

சம்பவ இடத்துக்குச் சென்றபோது பிளாண்ட் காயமடைந்திருப்பதைக் கண்ட அவர்கள் அவசர மருத்துவ உதவி வாகனத்தை அழைத்தனர்.

அதற்குக் காத்துக்கொண்டிருக்கும் வேளையில் பிளாண்ட் அதிகாரி டானைத் தள்ளிவிட முயற்சி செய்திருக்கிறார். 

பின்னர் அவசர மருத்துவ உதவி வாகனத்தில் ஏறும்படி கேட்டுக்கொண்டபோது மீண்டும் முரண்டுபிடித்துள்ளார் பிளாண்ட். 

சம்பவத்தில் அதிகாரி இஸ்மாடிக்கு முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டன.   

Top