Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்குள் 800க்கும் அதிகமான பறவைகளைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

சிங்கப்பூருக்குள் 800க்கும் அதிகமான பறவைகளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூருக்குள் 800க்கும் அதிகமான பறவைகளைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

படம்: ICA

சிங்கப்பூருக்குள் 800க்கும் அதிகமான பறவைகளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியில் பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அண்மை ஆண்டுகளில், இத்தனை அலங்காரப் பறவைகள் ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதன்முறை என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.

மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட பேருந்து ஒன்றிலிருந்து, பறவைகளின் சத்தம் வருவதைத் தொடர்ந்து பேருந்தில் தீவிரச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பறவைகளைக் கடத்துவதற்காகவே பேருந்தின் பின்புறம் இருந்த சக்கரங்களுக்கு மேல் சில அறைகள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருந்தன.

15 கொள்கலன்களில், மொத்தம் 815 பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் சுமார் 600 பறவைகள் மட்டுமே உயிரோடு எஞ்சின.

தற்போது அவை, தேசியப் பூங்காக் கழகத்தின் பராமரிப்பில் உள்ளன.

35 வயது மலேசிய வாகன ஓட்டுநரிடம், பறவைகளை எடுத்து வருவதற்கான உரிமமோ, அவற்றுக்கான சுகாதாரச் சான்றிதழோ இல்லை. கடத்தல் சம்பவம் குறித்து, கழகம் விசாரித்து வருகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்