Images
  • automated food delivery (1)
    (படம்: வில்சன் சைலஸ்)

மூத்தோருக்கு உணவு விநியோகிக்கும் தானியக்க வாகனங்கள்

Peacehaven பராமரிப்பு இல்லத்தில், மூத்தோர் இருக்கும் இடத்திற்கே உணவை விநியோகிக்கும் புதிய தானியக்க வாகனங்கள் இன்று அறிமுகம் கண்டன.

ஒரே நேரத்தில் 300 கிலோகிராம் எடையுள்ள உணவை வாகனங்களால் கொண்டு செல்ல முடியும்.

இதன் மூலம் ஊழியர்களைச் சார்ந்திருக்கும் போக்கைக் குறைத்துக்கொள்ள முடிவதாக இல்லம் தெரிவித்தது.

அதிக பாரம் கொண்ட தள்ளுவண்டிகளை ஒவ்வொரு வார்டுக்கும் எடுத்துச்செல்லும் வேலைக்கு அதிகமானோர் முன்வருவதில்லை.

புதிய வாகனங்கங்கள் ஐபேடுகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
இதனால் பராமரிப்பாளர்களின் வேலையும் எளிதாகிறது.

Top