Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கடலைப் பலகாரத்தில் உலோகப் பொருள் கண்டுபிடிப்பு

சிங்கப்பூர்: Da Ji Da Li கடலைப் பலகாரத்தில் உலோகப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடைகளில் இருந்து அது மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: Da Ji Da Li கடலைப் பலகாரத்தில் உலோகப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடைகளில் இருந்து அது மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

மலேசியாவிலிருந்து அந்தப் பதார்த்தம் தருவிக்கப்படுகிறது.

பலகாரங்களைச் செய்யப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் ஓர் உலோகப் பகுதி உடைந்து பலகாரப் போத்தலில் விழுந்ததாக ஆணையம் கூறியது.

"Kok Chye" என்றழைக்கப்படும் அந்தப் பலகாரம், சீனப் புத்தாண்டுப் பாரம்பரியப் பலகாரமாகக் கருதப்படுகிறது.

அந்த உணவுப்பொருளை வாங்கியவர்கள் அதனை உட்கொள்ள வேண்டாம் என்று ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது. பலகாரங்களைத் திருப்பித் தர அல்லது வேறு பொருள்களுக்கு மாற்றிக்கொள்ள விரும்புவோர் Mac Taste Bakery & Confectionery நிறுவனத்திற்கு 6284 9119 என்ற எண் வழியாகத் தொடர்புகொள்ளலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்