Images
  • AVSAAAA
    படம்: வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம்

சிங்கப்பூருக்குள் கடல் ஆமை முட்டைகளைக் கடத்தும் முயற்சி - 22 சம்பவங்கள் முறியடிப்பு

சிங்கப்பூருக்குள் கடந்த ஆறு மாதங்களில் கடல் ஆமை முட்டைகளை பயணிகள் கடத்திவர முயன்ற 22 சம்பவங்கள் முறியடிக்கப்பட்டதாக வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்திருக்கிறது.

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் உதவியால் அவை தடுக்கப்பட்டதாக வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் குறிப்பிட்டது.

ஆமை முட்டைகளைத் தின்பண்டங்களிலும், கைப்பைகளிலும் மறைத்து வைத்து சிலர் கொண்டுவந்ததும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

கடல் ஆமைகள் அருகிவரும் உயிரினங்களில் ஒன்று.

சிங்கப்பூரின் அருகிவரும் உயிரினங்கள் சட்டத்தின் படி கடல் ஆமை முட்டைகளின் இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, கண்காட்சி ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆமை முட்டைகளைக் கடத்துவோருக்கு 500,000 வெள்ளி வரை அபராதமோ, இரண்டு ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
 

Top