Images
  • tuas accident
    (படம்: SG Road Vigilante/Facebook)

AYE-இல், தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆடவர் மரணம்

AYE விரைவுச்சாலையில் நடந்த விபத்தில், 31 வயது ஆடவர் ஒருவர் மாண்டார்.

விபத்து நேற்று (செப்டம்பர் 12) நடந்தது.

துவாஸ் நோக்கிச் செல்லும் AYE விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிளுக்கும், தண்ணீர் லாரிக்கும் இடையில் விபத்து நேர்ந்துள்ளதாகக் காவல்துறையினர் மதியம் மூன்றரை மணியளவில் தகவல் பெற்றனர்.

மோட்டார் சைக்கிள் ஆடவர் சம்பவ இடத்தில் மாண்டதை மருத்துவ உதவியாளர்கள் உறுதிப்படுத்தியதாய்க் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விசாரணை தொடர்கிறது.

Top