Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்: டாக்சியில் குழந்தை பெற்ற தாயார்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், கர்ப்பிணி ஒருவர் டாக்சியில் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்: டாக்சியில் குழந்தை பெற்ற தாயார்

(படம்: Ustaz Helmi via Instagram & 8world)

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், கர்ப்பிணி ஒருவர் டாக்சியில் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அதுபற்றி 8 World, Berita Mediacorp செய்திகள் தகவல் வெளியிட்டன.

(ஏப்ரல் 12) திங்கட்கிழமை காலை நடந்த மறக்க முடியாத அனுபவத்தைப் பற்றி
பெண்ணின் கணவர், ஹெல்மி (Helmi), Instagram-இல் பகிர்ந்துகொண்டார்.

காலை 5.30 மணியளவில், Hafidzah-வுக்கு பிரசவ வலி அதிகரித்ததைத் தொடர்ந்து, அவரது கணவர் டாக்சியை அழைத்தார்.

நிலைமையைப் புரிந்துகொண்ட ஓட்டுநர் டாக்சியை வேகமாக மருத்துவமனையை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தார்.

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் செல்லும்போது, 6.20 மணிக்கு பிரசவம் நடந்தது.

ஹெல்மி தனது மனைவிக்கு பிரசவத்தில் உதவினார்.

அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

காலை 6.40 மணிக்கு அவர்கள் பாதுகாப்பாக மருத்துவமனையை அடைந்தனர்.

ஹெல்மி, டாக்சி ஓட்டுநர் Leo Siew Tiew-ஐ பாராட்டினார்.

அவர் மிக அமைதியாகவும் நட்பாகவும் பழகினார் என்றும் எந்தவிதமான அதிருப்தியையும் காட்டவில்லை என்றும்
ஹெல்மி கூறினார்.

ரமதான் ஆசீர்வாதம் நிறைந்த மாதம் என்பதால், குழந்தையைத் தங்கள் குடும்பத்துக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகக் கருதுகின்றனர் பெற்றோர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்