Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய குழந்தை வியட்நாமில் மரணம்

வியட்நாமிய காப்பித் தோட்டத்தில் கைவிடப்பட்ட ஒரு குழந்தை சிங்கப்பூரில் சிகிச்சைபெற்றுத் திரும்பியபிறகு அங்கு மாண்டுவிட்டது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய குழந்தை வியட்நாமில் மரணம்

(படம்: Mount Elizabeth Hospital)


வியட்நாமிய காப்பித் தோட்டத்தில் கைவிடப்பட்ட ஒரு குழந்தை சிங்கப்பூரில் சிகிச்சைபெற்றுத் திரும்பியபிறகு அங்கு மாண்டுவிட்டது.

வியட்நாமிலுள்ள ஒரு மடத்தில் அதிகாலை 4 மணியளவில் குழந்தை ட்ரி ஹோய் ஆன் (Trieu Hoai An) மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்து 17 நாட்கள் மட்டுமே ஆன குழந்தை ஹோய் ஆன்.

குழந்தை மார்ச் மாதம் வியட்நாமியக் காப்பித் தோட்டத்திலுள்ள ஒரு மரத்தில் பிளாஸ்டிக் பையில் வைத்துக் கைவிடப்பட்டிருந்தது.

குழந்தையின் தலையிலும் உடலின் இதர பல இடங்களிலும் புழுக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன.

அதோடு 'hydranencephaly' எனும் அரிய வகை நரம்பியல் நோயால் குழந்தைக்கு வலிப்பு, கண்பார்வைக் கோளாறு போன்ற பிரச்சினைகள் இருந்தன.

குழந்தை ஹோய் ஆன் ஓராண்டுக்குமேல் உயிர்வாழ சாத்தியமில்லை என்று வியட்நாமிய மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

பிறந்து 17 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்ட குழந்தைக்கு மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.

குழந்தையின் நிலையைக் கேட்டு சிகிச்சைக்கு நன்கொடை வழங்க பல சிங்கப்பூரர்கள் முன்வந்தனர்.

குழந்தையின் உடல்நலம் மேம்பட்டது.

இரு மாதங்களுக்குப்பின் குழந்தை வியட்நாமிற்குத் திரும்பியது.

மடத்திலுள்ள குழந்தையின் பராமரிப்பாளர் ஹோய் ஆன் இறந்ததுபற்றித் தனது Facebook பக்கத்தில் பதிவுசெய்தார்.

அதிகாலை 3 மணிக்குக் குழந்தை அழுததைத் தொடர்ந்து அதற்குப் பால் கொடுத்ததாக அவர் கூறினார்.

ஆனால் குழந்தை தொடர்ந்து அழுதது. சற்றுநேரத்திற்குப்பின் குழந்தையின் மூச்சு நின்றுவிட்டதாகப் பதிவில் குறிப்பிடப்பட்டது.

குழந்தை ஹோய் ஆன் மரணம் குறித்து மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை வருத்தம் தெரிவித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்