Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குழந்தைகளைத் தூங்க வைக்கும்போது பெற்றோர் எதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும்?

சிறு குழந்தைகள் மூச்சுத் திணறி மாண்டுபோகும் சம்பவங்கள் அண்மையில் சில நேர்ந்துள்ளன.

வாசிப்புநேரம் -
குழந்தைகளைத் தூங்க வைக்கும்போது பெற்றோர் எதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும்?

(கோப்புப் படம்: Aditya Romansa/Unsplash)

-பிரியங்கா

சிறு குழந்தைகள் மூச்சுத் திணறி மாண்டுபோகும் சம்பவங்கள் அண்மையில் சில நேர்ந்துள்ளன.

உறங்கிக்கொண்டிருந்த பெற்றோர் ஒருவருடன் தூங்க வைத்ததாலும், தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்தபோது தாயார் தூங்கிவிட்டதாலும் குழந்தைகள் மாண்டதாகத் தெரியவந்தது.

குழந்தைகளைத் தூங்க வைக்கும்போது பெற்றோர் எதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும்? எதைச் செய்யலாம்...செய்யக்கூடாது?

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மாருக்கான ஆதரவுக் குழுவின் (The Mothers' Support Group) பயிற்சியாளரான டாக்டர் மைதிலி பாண்டியிடம் பேசியது 'செய்தி'.

செய்யவேண்டியது
- குழந்தையைத் தூங்க வைக்கும்போது ஒருவர் குழந்தையின் நடவடிக்கைகளைக் கவனிக்கவேண்டும்.
- குழந்தையின் ஆடைகள் இறுக்கமானதாக இருக்கவேண்டும்.
- பாலூட்டும் தாயும் குழந்தையும் மட்டுமே ஒரே படுக்கையில் தூங்கலாம். தந்தை அவ்வாறு தூங்கக்கூடாது.
- படுக்கையில் குழந்தை மல்லாந்து உறங்குகிறதா என்பதை உறுதிப்படுத்தவேண்டும். குப்புறப் படுத்துத் தூங்கக்கூடாது.
- குழந்தையைச் சுற்றிக் கயிறு இருந்தால் அதை அகற்றவேண்டும்.

செய்யக்கூடாதது
- குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் வழக்கம் இல்லையென்றால், குழந்தையும் தாயும் ஒரே படுக்கையில் உறங்கக்கூடாது.
- குழந்தையைச் சுற்றி மெதுவான தலையணைகள், விளையாட்டுப் பொருள்கள், போர்வை இருக்கக்கூடாது.
- குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போது தூங்கக்கூடாது.
- குழந்தையை Sofa-வில் தூங்க வைக்கக்கூடாது.
- குழந்தையைத் துணியைக் கொண்டு சுற்றி வைக்கக்கூடாது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்