Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பங்களாதேஷ் ஆடவர் கைது

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 26 வயது பங்களாதேஷ் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பங்களாதேஷ் ஆடவர் கைது

(கோப்புப் படம்: Jeremy Long)

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 26 வயது பங்களாதேஷ் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டதாக அமைச்சின் அறிக்கையில் அது குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை நடத்திய விசாரணையில், அஹ்மட் ஃபைசல் (Ahmed Faysal) என்ற அந்த ஆடவர் தீவிரவாதச் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டிருந்தது தெரிய வந்ததாக அமைச்சு கூறியது.

சமயத்திற்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபடவும் அவர் எண்ணியிருந்ததாக அது சுட்டியது.

2017 இலிருந்து சிங்கப்பூரில் கட்டுமான ஊழியராகச் வேலை செய்யும் அவர், இம்மாதம் (நவம்பர்) 2ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

சிரியாவில் உள்ள ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (Hayat Tahrir Al-Sham) என்ற பயங்கரவாதக் குழுவுக்கு அவர் சென்ற ஆண்டு பணம் அனுப்பினார்.

வன்முறையை ஆதரிக்கும் பதிவுகளையும் சமூக ஊடகங்களில் அவர் பதிவேற்றியுள்ளார்.

ஐ.எஸ், அல் கயிடா (Al-Qaeda) உள்ளிட்ட தீவிரவாதக் குழுக்களுக்கும் அவர் ஆதரவு தெரிவித்தார்.

ஐரோப்பாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், சிங்கப்பூர்ப் பாதுகாப்பு அமைப்புகள் விசாரித்த 37 பேரில், ஃபைசலும் ஒருவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்