Images
  • hotel
    படம்: Google Street View

கேலாங் ஹோட்டலில் பணிப்பெண்ணைக் கொலை செய்த பங்களாதேஷ் சந்தேக நபர் மீது மீண்டும் விசாரணை

கேலாங் ஹோட்டல் ஒன்றில் தமது முன்னாள் காதலியான இந்தோனேசியப் பணிப்பெண்ணைக் கொலை செய்த சந்தேகத்தில் பங்களாதேஷ் ஆடவர் மீது நடத்தப்படும் விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது.

அகமது சலீம் என்ற அந்த 31 வயது ஆடவர் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் Golden Dragon ஹோட்டலில் பணிப்பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக நம்பப்படுகிறது.

பணிப்பெண் அகமதை அவமானப்படுத்தியதாலும் இழிவாக நடத்தியதாலும் கொலை செய்யத் தூண்டப்பட்டதாக அகம்தின் தரப்பு நீதிமன்றத்தில் கூறியது. 

அகமதிற்கு ஒத்துப்போகும் மனநலப் பிரச்சினை (adjustment disorder) இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அகமது சுவா சூ காங்கில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். பணிப்பெண் சிராங்கூனில் ஒரு வீட்டில் வேலை செய்துவந்தார்.

2012ஆம் ஆண்டு இருவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு அது காதலாக மாறியது. 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

ஆனால் அதே நேரத்தில் பணிப்பெண் இன்னொருவரைக் காதலித்திருக்கிறார்.

அதனால் அகமதிற்கும் அவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது.

அகமது பணிப்பெண்ணைக் கொலை செய்ய ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததாக எதிர்த்தரப்பு தெரிவித்தது.

அகமதின் மனநலப் பிரச்சினைக்கும் கொலைக்கும் எந்தத் தொடர்பு இல்லை என்று மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆடவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

Top