Images
  • love scam
    கோப்புப்படம்:  CNA 

வாடிக்கையாளர்களுக்கு ஏற்படவிருந்த 300,000 வெள்ளிக்கும் மேற்பட்ட இழப்பைத் தடுத்துநிறுத்திய வங்கி ஊழியர்கள்

தொழில்நுட்ப உதவி செய்தவாதக் கூறி மோசடி செய்வோர் குறித்துக் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்ற மாதம், அத்தகைய மோசடியில் இருவர் தங்கள் வாழ்க்கைச் சேமிப்பை இழந்திருக்கக்கூடும் எனக் காவல்துறையினர் கூறினர்.

அவர்களில் ஒருவரின் வயது 51. மற்றவரின் வயது 74.

முதலாமவரிடம், அவருடைய வீட்டின் Wifi எனும் இணையத் தொடர்புச் சேவை, சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக மோசடிக்காரர்கள் கூறியிருந்தனர்.

அவர்கள் தொழில்நுட்ப உதவி வழங்கும் நிறுவன ஊழியர்களைப் போல் தொலைபேசியில் நடித்ததாக நம்பப்படுகிறது.

அதனை நம்பிய பாதிக்கப்பட்டவர், மோசடிக்காரர்கள் கூறியபடி, Ultraviewer எனும் செயலியைத் தமது கணினியில் பதிவிறக்கம் செய்தார்.

அதிலிருந்து, அவரின் கணினியைக் கட்டுக்குள் கொண்டுவந்த மோசடிக்காரர்கள் பின்னர், அவரின் OCBC வங்கியிலிருந்து பணத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்தனர்.

இரண்டாமவருக்கும் அதைப் போலவே, வீட்டில் இணையச் சேவைகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அவரும் தம் கணினியில் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அவரின் இணைய வங்கி குறித்த விவரங்களையும் பகிர்ந்துகொண்டார்.

நல்லவேளையாக, இணையப் பண மாற்றங்களைக் கவனித்துக்கொண்டிருந்த OCBC வங்கி ஊழியர்கள், 300,000 வெள்ளிக்கும் மேற்பட்ட இரு மோசடிகளையும் சரியான நேரத்தில் தடுத்துநிறுத்தினர். 

Top