Images
  • Bank
    (படம்: Roslan RAHMAN / AFP)

DBS, Standard Chartered உள்ளிட்ட வங்கிகளை ஏமாற்றி மோசடிசெய்ததாக இருவர் மீது குற்றச்சாட்டு

வங்கிகளை ஏமாற்றி மோசடிசெய்ததாக சிங்கப்பூரர்கள் இருவர் இன்று (ஜூலை 11) நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

DBS, Malayan, Standard Chartered ஆகிய மூன்று வங்கிகளையும் அவர்கள் ஏமாற்றியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

வர்த்தகக் கடனுக்கு விண்ணப்பித்தபோது 1.7 மில்லியன் வெள்ளியை அவர்கள் ஏமாற்றிப் பெற்றதாகக் கூறப்பட்டது.

48 வயது டா யூ சியா (Tan You Jia), 50 வயது லீ பெங் யொங் (Lee Beng Yong) ஆகிய அந்த இருவரும் இரண்டு வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

2014ஆம் ஆணடுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தச் சம்பவம் இடம்பெற்றது. அவர்கள் மீதான ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் தனித்தனியே ஐந்தாண்டு வரை சிறைத்தண்டனையும் நூறாயிரம் வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படலாம்.  

Top