Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அனுமதியின்றி பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் சிங்கப்பூரிலிருந்து வெளியேற்றம்

அனுமதியின்றி பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததற்காக ஹாங்காங்கைச் (Hong Kong) சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர் சிங்கப்பூரைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
அனுமதியின்றி பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் சிங்கப்பூரிலிருந்து வெளியேற்றம்

(படம்: Alex Yeung's YouTube channel)

அனுமதியின்றி பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததற்காக ஹாங்காங்கைச் (Hong Kong) சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர் சிங்கப்பூரைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி வழங்காமல் திரு. ஆலெக்ஸ் யங் (Alex Yeung) இனி சிங்கப்பூருக்குத் திரும்பி வர முடியாது எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவரின் கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஹங்காங்கைப் பாதித்துவரும் ஆர்ப்பாட்டங்களைப் பற்றி கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்து, திரு. யங் சென்ற மாதம் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

பொதுக் கூட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அவர் காவல்துறையினருக்கு உதவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்