Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாத்தாம் மரப்பாலம் உடைந்து விழுந்ததில் காயமடைந்த சிங்கப்பூரர்கள் இன்று தாயகம் திரும்புவர்

இந்தோனேசியாவின் பாத்தாம் தீவில் மரப்பாலம் உடைந்து விழுந்ததால் காயமடைந்த சிங்கப்பூரர்கள் 18 பேர் மருத்துவமனையிலிருந்து திரும்பி விட்டதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
பாத்தாம் மரப்பாலம் உடைந்து விழுந்ததில் காயமடைந்த சிங்கப்பூரர்கள் இன்று தாயகம் திரும்புவர்

(படம்: Facebook/Berita Batam)

இந்தோனேசியாவின் பாத்தாம் தீவில் மரப்பாலம் உடைந்து விழுந்ததால் காயமடைந்த சிங்கப்பூரர்கள் 18 பேர் மருத்துவமனையிலிருந்து திரும்பி விட்டதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Montigo Resort தலத்தில் உள்ள 70 மீட்டர் மரப்பாலத்தில் அவர்கள் நேற்று படமெடுத்துக் கொண்டிருந்தபோது பாலம் தகர்ந்தது.

முப்பதுக்கும் அதிகமானோர் கடலில் விழுந்தனர்.

அவர்களில், சிங்கப்பூரர்கள் 13 பேர் பாயாங்காரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் லேசான காயங்களுக்காகச் சிகிச்சை பெற்றனர் என்றும் இந்தோனேசிய ஊடகம் தெரிவித்திருந்தது.

காயமடைந்த சிங்கப்பூரர்கள் இன்று தாயகம் திரும்புவர் என்று CNA 938 வானொலிக்குப் பேட்டியளித்த டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்