Images
  • Batam Singaporeans
    (படம்: Facebook/Berita Batam)

பாத்தாமில் மரப் பாலம் தகர்ந்து விழுந்ததில் 18 சிங்கப்பூரர்களுக்குக் காயம்


இந்தோனேசியாவின் பாத்தாமிலுள்ள Montigo Resort தலத்தில் மரப் பாலம் தகர்ந்து விழுந்ததில் சிங்கப்பூரர்கள் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

சுற்றுலா சென்ற அவர்கள் 70 மீட்டர் மரப்பாலத்தின் மீது ஏறி நின்று படம் எடுத்துக் கொண்டிருந்தபோது அதன் நடுப்பகுதி தகர்ந்து விழுந்தது.

முப்பதுக்கும் அதிகமானோர் கடலில் விழுந்தனர்.

சிங்கப்பூரர்கள் 13 பேர் பாத்தாமிலுள்ள பயாங கரா மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் ஐவரின் இலேசான காயங்களுக்காக சிகிச்சை வழங்கப்பட்டதாக இந்தோனேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.

மரப்பாலம் தகர்ந்து விழுந்தது குறித்து தனக்குத் தெரியவந்ததாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாத்தாமிலுள்ள சிங்கப்பூர் துணைத்தூதரக அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று உரிய உதவிகளை வழங்கி வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.  

Top