Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புக்கிட் பாத்தோக் வெஸ்ட் வீட்டில் $43,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யு 5இல் 38 வயது சிங்கப்பூர் ஆடவர் கைசெய்யப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
புக்கிட் பாத்தோக் வெஸ்ட் வீட்டில் $43,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

(படம்: CNB)

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யு 5இல் 38 வயது சிங்கப்பூர் ஆடவர் கைசெய்யப்பட்டுள்ளார்.

385 கிராம் ஐஸ், 32 கிராம் Heroin, Ecstacy மாத்திரைகள் உள்ளிட்டவற்றை அவர் வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு சுமார் 43,000 வெள்ளி என நம்பப்படுகிறது.

உட்லண்ட்ஸ் சிர்கில் (Woodlands Circle) பகுதியில் மலேசியாவைச் சேர்ந்த 31-வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

சுமார் 5,300 வெள்ளி அவரிடம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதாவதற்கு முன் 2 சந்தேக நபர்களும் தெக் வாய் அவென்யுவில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

விசாரணை தொடர்கிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்