Images
  • singapore skyline
    (படம்: Reuters)

முகவர்களின் தரத்தை உயர்த்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், புதிதாக 2 திட்டங்களுக்கு அங்கீகாரம்

சிங்கப்பூர்க் கட்டட, கட்டுமான ஆணையம் முகவர்களின் தரத்தை உயர்த்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிதாக இரண்டு திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கவிருக்கிறது.

கட்டட, கட்டுமானத் துறையில் தொழில் நிபுணத்துவம், போட்டித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் அந்த அங்கீகாரம் அமையும்.

புதிய திட்டங்கள் அடுத்த ஆண்டிலிருந்து நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

APFM எனப்படும் சொத்து முகவர், மேலாளர் சங்கமும், ASM எனப்படும் சொத்து மேலாளர் சங்கமும் அந்தத் திட்டங்களை முன்மொழிந்துள்ளன.

புதிய திட்டங்களின் கீழ், ஆணையத்துடன் இணைந்து இரு சங்கங்களும் பயிற்சித் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

அங்கீகாரம் பெற விரும்பும் தனியார் மேலாளர் சங்கங்கள் அனைத்தும், ஏதாவது ஒரு பயிற்சியைப் பூர்த்திசெய்ய வேண்டியது கட்டாயம்.

இதுவரை 10 தனியார் சங்கங்கள் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆணையம் கூறியது. 

Top