Images
  • bedok
    படம்: Google street view

கழக புளோக்கின் கீழ்த்தளத்தில் மாண்டு கிடந்த பெண், பச்சிளம் குழந்தை

பிடோக் நார்த் ரோட்டில் உள்ள கழக புளோக்கின் கீழ்த்தளத்தில் ஒரு பெண்ணும், 5 வாரக் குழந்தையும் மாண்ட நிலையில் கிடந்தனர்.

சம்பவம் குறித்து நேற்று மாலை ஐந்தே முக்கால் மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல் துறை தெரிவித்தது.

அந்த 35 வயது பெண்ணும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே மாண்டு கிடந்ததை அங்கு சென்ற மருத்துவ உதவியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

இயற்கைக்கு மாறான மரணமாக அது வகைப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணை நடைபெற்று வருகிறது.

Top