Images
  • bedok
    (படம்: Singapore Police Force)

வெட்டுக் கத்தியுடன் அடகுக் கடையில் திருட முயன்ற ஆடவர் கைது

பிடோக் வட்டாரத்தின் அடகுக்கடை ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 67 வயது ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

32 மணி நேரத்திற்குப் பிறகு அந்த ஆடவர் ஈசூனில் கைதானர்.

அந்த ஆடவர் இரண்டு நாள்களுக்கு முன் பிடோக் நார்த் ஸ்டீரீட் 1, புளோக் 213இல் அமைந்துள்ள ValueMax அடகுக்கடையில் பெரிய வெட்டுக் கத்தியுடன் திருட
முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவரது புகைப்படம் நேற்று மதியம் காவல்துறையினரால் வெளியிட்டப்பட்டது.

நாளை அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 

Top