Images
  • beehive picture
    படங்கள்: மீனாட்சி முத்தையா

ஹுவா இ உயர்நிலைப் பள்ளியிலிருந்து அகற்றப்பட்டுள்ள தேன்கூடு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஜூரோங் வெஸ்ட்டில் அமைந்துள்ள ஹுவா இ உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன.

அந்தத் தேன்கூடு இப்போது அகற்றப்பட்டுள்ளது. ஒருவாரகாலமாகத் தேன்கூட்டில் இருந்த தேனீகள் அருகில் இருக்கும் புளோக்குகளை நோக்கிப் பறந்தன.

பகல், இரவு பாராமல் தேனீக்களின் தொந்தரவு அதிகமாய் இருந்ததாக 'செய்தி'யின் நேயர் மீனாட்சி முத்தையா தெரிவித்தார்.


ஜூரோங் வெஸ்ட் அவென்யூ ஒன்றில் வசிப்போரும் பள்ளிக்கு அருகில் இருக்கும் புளோக் 440இன் குடியிருப்பாளர்களும் தேனீக்களால் மிகவும் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து இன்று பூச்சிக் கட்டுப்பாட்டுப் பிரிவு தேன்கூட்டை அகற்றியது.


Top