Images
  • coot
    (படம்:AFP/Roslan Rahman)

Scoot விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றினால் 10 மணி நேரம் காத்திருந்த பயணிகள்

சிங்கப்பூரில் இருந்து பர்லின் செல்லவிருந்த Scoot விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பயணிகள் சுமார் 10 மணிநேரம் காத்திருக்கவேண்டியிருந்தது.

விமானத்தின் இறக்கைப் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அதற்குக் காரணம்.

Scoot விமானச் சேவை TR734 நேற்று அதிகாலை சுமார் ஒரு மணிக்குப் புறப்படவிருந்தது.

மற்றொரு விமானத்துக்குப் பயணிகள் மாற்றப்பட்ட பிறகு, விமானம் நேற்று காலை 11 மணி அளவில் பர்லின் நகருக்குப் புறப்பட்டது.

இடையூறுக்கு வருந்துவதாகக் கூறி Scoot மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

தாமதம் ஏற்பட்ட நேரத்தில், பயணிகளுக்கு உணவும் பானமும் வழங்கப்பட்டதாக அந்த நிறுவனம் கூறியது.  

Top