Images
  • best airline
    (படம்:  AFP)

உலகின் ஆகச்சிறந்த விமான நிறுவனங்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இரண்டாம் இடத்தில்

உலகின் ஆகச்சிறந்த விமான நிறுவனங்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

பாரிஸில் நேற்று ( ஜூன் 18) நடந்த அனைத்துலக விமான நிறுவன விருதுகளில் இவ்வாண்டு முதலிடத்தைத் தட்டிச் சென்றுள்ளது கத்தார் ஏர்வேஸ்.

கடந்தாண்டு முதல் நிலையில் சிங்கப்பூரும் இரண்டாம் நிலையில் கத்தாரும் வந்தன.

இந்த ஆண்டு மூன்றாம் நிலையில் ANA நிறுவனமும் நான்காம், ஐந்தாம் நிலைகளை கெத்தே பசிபிக், எமிரேட்ஸ் நிறுவனங்களும் பிடித்தன.

உலகின் ஆகச்சிறந்த விமான ஊழியர்கள், ஆகச்சிறந்த முதலாம் பிரிவுச் சேவை, ஆகச்சிறந்த முதலாம் பிரிவு இருக்கைகள், ஆசியாவின் ஆகச்சிறந்த விமான நிறுவனம் ஆகிய பிரிவுகளிலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விருதுகளைக் குவித்தது.

கடந்தாண்டு செப்டம்பர் முதல் இவ்வாண்டு மே வரை சுமார் 22 மில்லியன் பேரிடம் செய்யப்பட்ட இணையக் கருத்தாய்வின் அடிப்படையில் விருதுகள் முடிவு செய்யப்பட்டன.

சுமார் 100 நாடுகளைச் சேர்ந்தவர்கள் 300க்கு மேற்பட்ட விமான நிறுவனங்களிலிருந்து தங்களுக்குப் பிடித்த நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தனர்.


 

Top