Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் ஆகச் சிறந்த வானொலிக் கட்டமைப்பாக நீடிக்கும் மீடியாகார்ப்

மீடியாகார்ப் நிறுவனம் தொடர்ந்து சிங்கப்பூரின் ஆகச் சிறந்த வானொலிக் கட்டமைப்பு என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் ஆகச் சிறந்த வானொலிக் கட்டமைப்பாக நீடிக்கும் மீடியாகார்ப்

படம்: Oli96.8FM/Facebook

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

மீடியாகார்ப் நிறுவனம் தொடர்ந்து சிங்கப்பூரின் ஆகச் சிறந்த வானொலிக் கட்டமைப்பு என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

Nielsen Radio Diary கருத்துக்கணிப்பின்படி ஆகச் சிறந்த 10 வானொலி நிலையங்களில் 8 மீடியாகார்ப் நிறுவனத்தைச் சேர்ந்தவை.

கருத்துக்கணிப்பின்படி வானொலி கேட்கும் பெரியவர்களில் ஐந்தில் நால்வர் ஒவ்வொரு வாரமும் மீடியாகார்ப்பின் வானொலி நிலையங்களைச் செவிமடுக்கின்றனர்.

சீன வானொலி நிலையமான YES 933 முதல் இடத்தைப் பிடித்துள்ளது. LOVE 972 இரண்டாம் இடத்திலும் CLASS 95 மூன்றாம் இடத்திலும் வந்துள்ளன.

மீடியாகார்ப் ரசிகர்கள் வானொலி நிலையங்களைக் கேட்க கூடுதலான நேரத்தைச் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஒரு வாரத்தில் ரசிகர்கள் ஆக அதிக நேரம் கேட்கும் வானொலி நிலையங்களின் பட்டியலில் ஒலி 96.8 மூன்றாம் நிலையில் வந்துள்ளது.

கடந்த முறையைக் காட்டிலும் 2 மணிநேரம் கூடுதலாக 12 மணிநேரம் ஒலி96.8ஐக் கேட்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்