Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்வது வயதுப் பாகுபாட்டைக் குறைக்க உதவும்: கவனிப்பாளர்கள்

சிங்கப்பூரில் வேலை தேடும் 40 வயதுக்கு மேற்பட்டோர், தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் வேலை தேடும் 40 வயதுக்கு மேற்பட்டோர், தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

அது மூத்த ஊழியர்களை நோக்கி காட்டப்படக்கூடிய வயதுப் பாகுபாட்டைக் குறைக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

அரசாங்கச் சலுகைகளைப் பயன்படுத்தி, முதிர்ச்சியடைந்த ஊழியர்களின் திறன்களை வளர்க்க உதவும் முயற்சியில் முதலாளிகளும் ஈடுபடவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு, புதிய தொழில்நுட்பத் திறன்களைக் கற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கும் ஊழியர்களை நிறுவனங்கள் விரும்புகின்றன.

கடந்த சில ஆண்டுகளில், 50 வயதுக்கு மேற்பட்டோரிடையே வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.

அவர்களில் 10-இல் ஒருவர் வயது பாகுபாடு காரணமாக ஒதுக்கப்படுவதாக நியாயமான வேலையிட நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணி கூறுகிறது.

முதிர்ச்சியடைந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுடைய கற்றலில் நிறுவனங்கள் முதலீடு செய்யவேண்டும்.

வேலையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் ஊழியர்களுக்கு இருந்தால், பாகுபாட்டுக்கு இடமில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மொத்தத்தில் எதிர்கால வேலைகளில் நிலைத்திருக்க, சிங்கப்பூர் ஊழியரணி, வாழ்நாள் கற்றலை வழக்கமாக்கிக்கொள்வதே சிறந்தது என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்