Images
  • Bicentennial Notes
    (படம்: CNA)

200ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் $20 வெள்ளி நோட்டுகளை மீண்டும் அச்சிட திட்டம்


சிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் 20 வெள்ளி நோட்டுகளை மீண்டும் அச்சிடவிருப்பதாக சிங்கப்பூர் நாணய வாரியம் குறிப்பிட்டுள்ளது. பொதுமக்களின் வலுவான ஆதரவுக்கு இணங்க அவ்வாறு செய்வதாக வாரியம் கூறியது.

கூடுதலாக 2 மில்லியன் நோட்டுகளையும் அவற்றுக்கான சிறப்புக் கோப்புகளையும் அக்டோபருக்கும் நவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

புதிய 20 வெள்ளி நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டே வாரங்களில் அனைத்துமே மாற்றிக்கொள்ளப்பட்டு விட்டதாக வாரியம் குறிப்பிட்டது.

Top