Images
  • cbd skyline
    மத்திய வர்த்தக வட்டாரம். (படம்: Channel NewsAsia)

அலுவலக நேரத்துக்குப் பிறகும் தஞ்சோங் பகார் வட்டாரத்தை துடிப்பாக வைத்திருக்க உதவும் சமூக நடவடிக்கைகள்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தஞ்சோங் பகார் (Tanjong Pagar) வட்டாரத்தில் உள்ள 8 கட்டடங்களின் உரிமையாளர்கள், வர்த்தக மேம்பாட்டு வட்டாரத் திட்டத்தின் கீழ், சில சமூக நடவடிக்கைகளைத் தொடங்க கைகோத்துள்ளனர்.

அலுவலக நேரத்திற்குப் பிறகுச் சமூக மற்றும் உடலுறுதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வகைசெய்வது நோக்கம்.

ஓராண்டுக்கு முன், நகரச் சீரமைப்பு ஆணையம் அறிவித்திருந்த 9 முன்னோடித் திட்டங்களில் முதலாவது அது.

திட்டத்தின் கீழ் இடம்பெற்ற நடவடிக்கைகளில் இலையுதிர்காலத் திருவிழா நிகழ்ச்சியும் ஒன்று.

அதில் பங்கேற்றோர் மூன் கேக் எனும் சந்திரப் பணியாரம் செய்தல், தைச்சி (Taichi) எனும் உடலுறுதி நடவடிக்கை போன்றவற்றில் ஈடுபட்டனர்.

Top