Images
  • sg cases (17)

இருமொழிக் கல்வி இதுவரை இல்லாத அளவில் அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது: கல்வியமைச்சர்

பிளவுபட்டுள்ள உலகில், இருமொழிக் கல்வி இதுவரை இல்லாத அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பொருத்தமானதாகவும் உள்ளது.

இருமொழிக் கல்விக்கான லீ குவான் இயூ நிதியின்
10-ஆம் ஆண்டுநிறைவு நிகழ்ச்சியில் கல்வியமைச்சர் சான் சுன் சிங் அதனைக் கூறினார்.

"சித்தாந்தம், கலாசாரம், ஆட்சிமுறை ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளால் பிளவுபடக்கூடிய உலகில், பல்வேறு கண்ணோட்டங்களைக் கொண்ட பல்வேறு தரப்பினருடன் தொடர்பை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பது அதிக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது," என்று அவர் கூறினார்.

இருமொழிக் கல்வி சிங்கப்பூரர்களின் தேசிய அடையாளத்தில் முக்கியப் பங்கு வகிப்பதைத் திரு. சான் சுட்டினார்.

"வேறுபாடுகளைக் கடக்கக்கூடிய சிங்கப்பூரர்கள் என்ற தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவதில் உள்ள கடப்பாட்டை அது வெளிப்படுத்துகிறது." என்று அவர் கூறினார்.

இந்நிலையில் இருமொழிக் கல்விக்கான லீ குவான் இயூ நிதியின் வழி, பயனீட்டாளர்களால் உருவாக்கப்படும் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கு முயற்சி எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

பல்வேறு பங்காளி அமைப்புகளுடன் இணைந்து பணிபுரிவதன் மூலம், மேலும் பல சமூகத்தினரை எட்டமுடியும் என்று அமைச்சர் சான் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளாகச் சுமார் 27 மில்லியன் வெள்ளி மதிப்புமிக்க 200 திட்டங்களுக்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது.

- CNA/hm(ac) 

Top