Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

22,000 உயிர் மருத்துவ அறிவியல் துறை ஊழியர்கள் திறன்களைப் புதுப்பித்துக்கொள்ள புதிய திட்டம்

உயிர் மருத்துவ அறிவியல் துறையில் பணிபுரியும் 22,000க்கும் அதிகமான ஊழியர்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள உதவும் நோக்கில் BMTC எனும் பயிற்சித் திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.

வாசிப்புநேரம் -

உயிர் மருத்துவ அறிவியல் துறையில் பணிபுரியும் 22,000க்கும் அதிகமான ஊழியர்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள உதவும் நோக்கில் BMTC எனும் பயிற்சித் திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.

தொழில்துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி, மின்னிலக்க மயமாதல், தலைமைத்துவம் போன்றவற்றில் மும்முனை அணுகுமுறையில் அந்தத் திட்டம் கவனம் செலுத்தும்.

தொழிலாளர் இயக்கத்தின் e2i எனப்படும் வேலைவாய்ப்பு, வேலைத் திறன் நிலையமும், ரசாயனத் தொழிற்சாலை ஊழியர் சங்கமும் இணைந்து அத்திட்டத்தைத் தொடங்கியுள்ளன.

தலைமைத்துவம் திட்டத்தின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று என நிலையம் குறிப்பிட்டது.

அதன்கீழ் வரும் Project Zodiac திட்டம், மேலாண்மைப் பிரிவின் மூத்த அதிகாரிகளுக்கு மனநலம், நரம்பியல் போன்ற துறைகளில் திறன்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

தொழில்நுட்பம், நிர்வாகம் சார்ந்த பணிகளுக்குத் தேவையான திறன்கள், மனிதவளம் ஆகியவற்றைப் பொருத்தமான வகையில் பெறுவதற்கு அத்தகைய உத்தி கைகொடுக்கும் என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் கூறினார்.

e2i நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கில்பர்ட் டான், காலப்போக்கில் ஒவ்வொரு தொழில்துறையும் அதற்கான பயிற்சிக் குழுக்களையும், மன்றங்களையும் கொண்டிருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்